அன்புடன் வரவேற்கிறேன்..

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.. நன்றி... மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்..
உங்களது கருத்துகளையும்
ஆலோசனைகளையும்
எழுதவும்..

Sunday, April 15, 2012

அநீதிக்கு எதிராக...ஒன்று திரண்ட மக்கள்

சிதம்பரம், ஏப்ரல் 14: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக சிதம்பரம் அருகே லால்புரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் மற்று மதரஸா கட்ட அனுமதி மறுத்து வரும் கடலூர் மாவட்ட காவல்துறை, வருவாய்த் துறை சங்பரிவார கும்பலை கண்டித்து 14.04.2012 அன்று சிதம்பரம் பேருந்து நிலையம் காந்திசிலை அருகில் "மாபெரும் முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை மீட்பு போராட்டம்" மாவட்ட தலைவர் சகோ.முத்துராஜா தலைமையில் நடைப்பெற்றது.

  இதில் மாநில பொதுச் செயலாளர் கோவை.ரஹ்ம்மதுல்லாஹ் கலந்து கொண்டு கண்டன் உரையாற்றினர். அவர் தனது உரையில் சம்மந்தப்பட்ட இடத்தில் பள்ளிவாசல் மற்றும் மதரஸா கட்ட உடனே அனுமதி அளிக்கவில்லை எனில் தமிழகமே ஸ்தபிக்கும் அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டதை தொடரும் என்று தெரிவித்தார் என்றதும் போராட்ட களத்தில் அல்லாஹ் அக்பர் என்ற ஒலி வின்முட்ட ஒளித்தது. இதில் அணைத்து ஜமாத்தார்களும் ,பொதுமக்களும் ,2000 க்கும் மேறபட்டோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..........

Tuesday, February 07, 2012

மீலாதுன் நபி விழா – பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு

லால்பேட்டையில் இன்று 07.02.2012 நடைப்பெரும் மீலாதுன் நபி விழா – பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பை நமது இணையதளத்தில் இந்திய நேரம் இரவு 7.30 மணிமுதல் காணலாம்.

Sunday, January 01, 2012

புரசைவாக்க​ம் இமாம் மவ்லானா நிஜாமுத்தீ​ன் ஹழ்ரத் வஃபாத்

நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றிவரும், பன்னூல் ஆசிரியரும், திருக்குர்ஆன் விரிவுரையாளரும், சென்னை புரசைவாக்கம் பெரிய பள்ளிவாசலின் தலைமை இமாமும் தமிழகத்தின் மிகப் பெரும் தப்லீக் அறிஞரும் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் கே.ஏ. முஹம்மது நிஜாமுத்தீன் மன்பயீ ஹழ்ரத்அவர்கள், சனிக்கிழமை (31.12.2011) மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியாகியுள்ளது.

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள். இதற்காக தென்னகத்தின் தாய்க்கல்லூரியாம் வேலூர் ஜாமிஆ அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபி கலாசாலையை தலைமையிடமாக கொண்டு 1996 முதல் செயல்படும் ‘ஹைஅத்துஷ் ஷரீய்யா’ என்ற ஷரீஅத் பேரவையில் சிறப்பான முறையில் செயலாற்றி வந்தார்கள் ஹழ்ரத் அவர்கள்.

சன்மார்க்கக் கோட்டையாகிய லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் மவ்லவீ ஆலிம் பட்டம் (தஹ்ஸீல்) பெற்று, தப்லீக் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், சன்மார்க்க விளக்கம் தருவதில் முன்மாதிரியான அறிஞராகவும், சிக்கலான மார்க்க விஷயங்களைக் கூடப் பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்துக் கூறுவதில் வல்லவராகவும் திகழ்ந்தவர்கள் ஹஜ்ரத் அவர்கள்.

தமிழகத்தில் மீலாது விழாக்களிலும், ஷரீஅத் மாநாடுகளிலும், கல்லூரி விழாக்களிலும், தப்லீக் இஜ்திமாக்களிலும் ஹஜ்ரத் அவர்களின் உரை என்றால், அதனைக் கேட்கும் கூட்டம் தனியே தெரியும். இதயங்களை ஈர்க்கும் இனிய சொல்லரசாக விளங்கினார். ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவுகள் பல்லாயிரக்கணக்கில் ஒளி, ஒலிப் பேழைகளாக உலகம் முழுவதும் பரவியுள்ளன.
தமிழக மக்களின் இறைநம்பிக்கை(ஈமான்)யை தகர்த்தெறிந்த நவீன குழப்பவாதிகளின் முகத்திரைகளை கிழித்தெறிந்தார்கள். சத்திய மார்க்கத்தை தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள்.

யாருக்கும் பயப்படாமல், எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சிவிடாமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள்.

ஃபிக்ஹ் சட்டங்கள் குறித்து எழுந்த முறையற்ற விமர்சனங்களுக்கும், குழப்பவாதிகளால் தவறாக சித்தரிக்கப்பட்ட சட்டங்களுக்கும் ஆதாதங்களுடன் பதில் கொடுத்து குழப்பவாதிகளின் வாய்களை அடைத்தார்கள்.
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் பழக்கமில்லாத மார்க்க மேதை. எதையும் இதயத்தைத் தொடும்படியாக எடுத்துக் கூறும் இயல்புள்ள அறிஞர். சிந்தனையாளர்களுக்கு தூண்டுகோல், செயல் வீரர்களுக்கு துணைவர். மொத்தத்தில் சமுதாய ஒற்றுமைக்கும், சன்மார்க்க எழுச்சிக்கும் பாடுபட்டு மறைந்துள்ள பண்பட்ட தாயி, அவர்களின் மறைவு, உண்மையில் அறிவுலகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.

அறிஞரின் மறைவு அகிலத்தின் மறைவு என்னும் பழமொழிதான் இங்கே நினைவுக் வருகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்’ எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்’ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் .காம் இணையதளம் பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Wednesday, November 23, 2011

K-Tic: குவைத்தில் முப்பெரும் விழா! அரசு விருந்தினராக சூளைமேடு அப்துல்லாஹ் பாகவீ பங்கேற்பு!!

குவைத்தில் முப்பெரும் விழா!
குவைத் அரசு சிறப்பு விருந்தினராக சென்னை, சூளைமேடு மவ்லானா அப்துல்லாஹ் பாகவீ பங்கேற்பு!!
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
-------------------------------------------------
ஹிஜ்ரீ 1433 / இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி!
கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
சங்கத்தின் 7ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி!!!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

கடந்த ஆறு வருடங்களுக்கும் முன் ஹிஜ்ரீ 1427 / இஸ்லாமியப் புத்தாண்டு துவங்கும் முஹர்ரம் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம், கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் குவைத்தில் இயங்கும் ஒரே சிறந்த பேரியக்கமான K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், ஒவ்வொரு ஆண்டும் சங்கத்தின் துவக்க நிகழ்ச்சியை ஹிஜ்ரா நிகழ்ச்சியுடன் சேர்த்து கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் இணைத்துமுப்பெரும் விழாவாக நடத்திக் கொண்டு வருகின்றது.

அந்த அடிப்படையில் 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)'ஏற்பாடு செய்யும் (1) ஹிஜ்ரீ 1433 / இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி (2) கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி (3) சங்கத்தின் 7ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி ஆகிய 'முப்பெரும் விழா', நான்கு நாட்கள் மூன்று இடங்களில் ஐந்து நிகழ்ச்சிகளாக குவைத் அவ்காஃப்/ இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்...

சங்கத்தின் தலைவர் விஸ்வகுடி மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் தமிழகத்திலிருந்து வருகை தரும் மலேஷியா, கோலாலம்பூர் மஸ்ஜிதே இந்தியாவின் முன்னாள் இமாமும், பன்னூல் ஆசிரியரும், ீரிய சிந்தனையாளருமான சென்னை, சூளைமேடு மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் ேராசிரியர் மு. அப்துல்லாஹ் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் குவைத் அவ்காஃப்/ இஸ்லாமி விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.

முதல் நிகழ்ச்சி:

01.12.2011 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல் பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல உதைபீ (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் 'ஹிஜ்ரா - முழுமையான வரலாறும், படிப்பினைகளும், பாடங்களும்....' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும். இந் நிகழ்ச்சி ஹிஜ்ரீ 1433 / இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் நிகழ்ச்சி:

02.12.2011 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் 'ஜகாத் - நோக்கங்களும், தற்கால நடைமுறைகளும், பைத்துல் மாலின் (பொது நிதி கருவூலம்) முக்கியத்துவமும்...' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும்.

மூன்றாம் நிகழ்ச்சி:

02.12.2011 வெள்ளிக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில் உள்ள)' பள்ளிவாசலில் 'கல்வியும், ஒழுக்கம் சார்ந்த நெறிகளும், மார்க்கக் கல்வியின் முக்கியத்துவமும்....' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும். இந் நிகழ்ச்சி கல்வி / சமூக விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நான்காம் நிகழ்ச்சி:

08.12.2011 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் 'முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் - இஸ்லாமியக் குடும்பவியல்' என்ற தலைப்பில் ிறப்புரை நடைபெறும். இந் நிகழ்ச்சி பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐந்தாம் நிகழ்ச்சி:

09.12.2011 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் 'உளத்தூய்மை, மரண சிந்தனை, மண்ணறை வாழ்க்கை, மறுமை வெற்றி' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும்.

இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்திலும் குவைத் வாழ் தமிழ் உலம பெருமக்கள், பேராசிரியர்கள் ற்றும் பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாழ்த்துரைகளையும், சிற்றுரைகளையும் வழங்க இருக்கின்றனர். துஆவுடன் அனைத்து நிகழ்ச்சிகளும் இனிதே நிறைவுபெறும் இன்ஷா அல்லாஹ்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிற சமய சகோதரர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் ெய்து கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் ளப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

குறிப்பு:
  • நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்படும்.
  • அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.
  • 08.12.2011 வியாழக்கிழமை அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மட்டும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும்,ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றனர் சங்கத்தின் நிர்வாகிகள்.
  • குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
அனைவரும் குடும்பத்துடன் வருக! அன்பர்களையும் அழைத்து வருக!! அளவிலா அறிவமுதம் பெ(ப)ருக!!!

உலக மக்கள் அனைவருக்கும் K-Ticன் இதயங்கனிந்த ஹிஜ்ரீ 1433 / இஸ்லாமியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!



மேலதிக விபரங்களுக்கும், இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:

துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல் முகவரிகள்: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹு குழுமம்: http: //groups.yahoo.com/group/K-Tic-group
இணையதளம்: www.k-tic.com

Friday, October 21, 2011

லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்:–

லால்பேட்டை,அக்-21 லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை காட்டுமன்னார்குடி குருகலம் மேல்னிலைப்பள்ளியில் நடைப்பெறுகிறது அங்கிருந்து நமது செய்தியாளர் உடனுக்குடன் செய்திகளை தெரிவிக்கின்றார்
தலைவர் பொருப்புக்கு போட்டியிட்ட A.R.சபியுல்லா அ.இ.அ.தி.மு.க. 88 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி .
வார்டு 1. ராபியா-புஹாரி சுயேச்சை வெற்றி
வார்டு 2. அப்துல் ரஹீம் சுயேச்சை வெற்றி
வார்டு 3. ஷேய்குல் ஆதம் { சேட் } சுயேச்சை வெற்றி
வார்டு 4, தமிழ் தம்பி, பா.ம.க வெற்றி.
வார்டு 5, முயினா பேகம்,சுயேச்சை, வெற்றி,
வார்டு6, மிஸ்பாஹுன்னிஸா, முஸ்லிம் லீக் வெற்றி,
வார்டு 7, ஷேக் தாஉவூது, முஸ்லிம் லீக் வெற்றி,
வார்டு 8, ராஜம்,சுயேச்சை,வெற்றி,
வார்டு 9, அப்துல் சலாம்,சுயேச்சை. வெற்றி,
வார்டு 10, அஹம்து அலி,ம.ம.க.வெற்றி,
வார்டு 11, முஹம்மது இஸ்மாயில்,சுயேச்சை,வெற்றி,
வார்டு 12, ஜாகிர் உசேன், சுயேச்சை,வெற்றி,
வார்டு 13,அன்வர் சதாத், சுயேச்சை,வெற்றி,
வார்டு 14,லதா, சுயேச்சை,வெற்றி,
வார்டு 15,குணசேகரன், பா.ம.க,வெற்றி,