Breaking News

அல்-அய்னில் இரத்த தான முகாம்

நிர்வாகி
0
அல்-அய்னில் இரத்த தான முகாம்

கடல் கடந்து வாழ்ந்த போதிலும் என் கடன் பணி செய்து கிடப்பதே.. என்று சத்திய மார்கத்தின் வழிகாட்டுதலில் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கும் தமுமுக ஊழியர்கள்,தமிழகத்திற்கு வெளியேயும் வெளிநாடுகளிளும் ஆற்றி வரும் மக்கள் நலப் பணிகள் எண்ணிலங்காதவை..
வட்டியில்லாக் கடனுதவித் திட்டத்தில் சிறந்த சேவையாற்றி வரும் அல்-அய்ன் மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,தற்போது இரத்த தான சேவையைத் தொடங்கியுள்ளது. கடந்த 29.07.2010 வியாழனன்று மாலை 5 மணி தொடங்கி அல்-அய்ன் மண்டல இரத்த வங்கியை நோக்கி தமுமுக தொண்டர்கள் அணிவகுக்கத் தொடங்கினர். இரத்த சேமிப்பு கொள்ளளவை கருத்தில் கொண்டு குறைந்த அளவில் மட்டும் இப்போதைக்கு வழங்கினால் போதுமென்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால், 24 சகோதரர்கள் தங்தளது இரத்தத்தை தானமாக வழங்க முன் வந்தனர்.
மாலை 5 மணி தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்ற முகாமை அமீரக மு.மு.க வின் துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் தொடங்கி வைத்தார்.அமீரக மு.மு.க செயலாளர் சகோதரர் யாஸீன் நூருல்லாஹ்வின் ஆலோசனையின் பேரில் மண்டல தலைவர் கொள்ளுமேடு முஹம்மது ரிஃபாயி,மண்டல செயலாளர் மண்னை ஹாஜா மைதீன்,மண்டல துணைச் செயலாளர் அதிரை அப்துல் ரஹ்மான்,மண்டல இணைச் செயலாளர்கள் களப்பால் சையது யூசுப் ,விழுப்புரம் முஜிபுர்ரஹ்மான்,மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர் காட்டுமன்னார்குடி அஸ்கர் அலி ஆகியோர் முகாமை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்தனர்.
இரத்த வங்கியில் உதவியாளராக பணிபுரியும் தமிழக இளைஞர் மருதன்,தமிழர்கள் ஒன்று திரண்டு இரத்த தானம் செய்வது பாராட்டுக்குரியது என்று கூறிய அவர்..உண்மையில் நல்லதோர்
இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று நெகிழ்ச்சியுடன் குநிப்பிட்டார்.
இனி தொடர்ந்து இரத்த தான முகாம்கள நடத்தப் போவதாக மண்டல நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
புகழனைத்தும் இறைவனுக்கே..!
நன்றி:
கொள்ளுமேடு பை.மு.ரிஃபாயி
அல்-அய்ன்

Tags: தமுமுக

Share this