Breaking News

போக்குவரத்திற்கு தயாராகும் பக்கிங்ஹாம் கால்வாய்

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
0
சென்னை - ஆந்திரத்தை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயில் படகுப் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளாதாகவும், அதை மேற்கொள்வதற்கான திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று மத்திய நெடுஞ்சாலை & போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியத் தொழில் நிறுவன கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) சார்பில் தில்லியில் செவ்வாய்க்கிழமை (07.04.2015) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தெரிவித்தார்

பக்கிங்ஹாம் கால்வாய் தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய். சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். 

இக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடாவில் இருந்து தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வரை செல்கிறது. 1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோ மீட்டர்கள்.

இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19, 20ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது. இக்கால்வாய் கடற்கரையில் இருந்து சென்னைக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. 

சுதந்திரத்திற்குப் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது. 2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியது. 

தற்போது யாருக்கும், எதற்கும் உபயோகம் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. 

எனவே, மீண்டும் பக்கிங்ஹாம் கால்வாய் நீர்வழிப்பாதை திட்டம் மேம்படுத்தப்பட்டால் போக்குவரத்தில் தமிழகம் மிகச்சிறப்பான இடத்தை பெறும். இலட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். 

நமது அரசு செய்யுமா? 

என்ற கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு 23/12/2014 அன்று கோரிக்கை வைத்தேன் (எண்: 2014/812990/CR). 06.01.2015 அன்று பதில் வந்தது.

வந்த பதில்: 

The scheme for utilising the Buckingham canal as on inland water ways is under the consideration of the National Inland Waterway Authority and the same would be implemented in due course. Petitioner informed vide EIC WRD PWD Chepauk ch-5 lr.no.S7/CMP/CR/2014 dt 05.01.15.

Share this